பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலன் தன்னை தூப்பாக்கியால் சுடும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும் போது அதை காணொலியாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீகாணொலியில், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் காதலன் ஒரு தங்க நிற துப்பாக்கியை எடுத்து தனது காதலியை நோக்கி காட்டுகிறார்.
உடனே அந்த காதலி சிரித்துக்கொண்டே இருக்கிறார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை அழுத்தி காதலியை சுட்டார். திடீரென குண்டு காதலியின் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைத்தும் உயிரிழந்த காதலி காணொலி பதிவு செய்திருந்தார். அவர் உயிரிழந்ததும் சிறிது நேரத்திலேயே காணொலி முடிகிறது.
சம்பவத்தின் பின்னர் காதலன் பொலிசாருக்கு போன் செய்து தான் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறினார். இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.