OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!
OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

 

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நமது உலகில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் டெக்னாலஜி என்பது அதிக அளவில் வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்த டெக்னாலஜி உலகையே புரட்டிப்போடும் விதமாக சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, ஒரு புதிய சாட்போட்டைக் கண்டுபிடித்தது.

அதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘சாட் ஜிபிடி (Chat GPT)’ ஆகும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி, அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. இந்நிலையில், அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாம் ஆல்ட்மேனின் நிர்வாக குருவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழு உடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே, சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் முடிவை எடுத்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தலைமை நிர்வாகி அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

159 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.