[புதியவன்]
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் புதன்கிழமை ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் துப்பாக்கி குண்டுக் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கி சூடு சம்பவம் அறிந்ததும், சம்பவ இடத்திற்க்கு வந்த பொலிஸார் , கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்களை வெளியேற்றினர். அதன் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த போது 3 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததும் , துப்பாக்கி சூடு நடத்தியவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காவல்துறையினரால் சுடப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் நேற்று முழுவதும் மூட உத்தரவிடப்பட்டது. நிறுவனம் அருகே உள்ள சாலைகளையும் பொலிஸார் மூடினர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.