சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஒரு இயற்கை அனர்த்தமாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் கிழக்கு பகுதிகளில் ரிக்டர் அளவில் 5.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 23 பேர் காயம் அடைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.