நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 641,991 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,550 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,650 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,770 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,820 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.