ஆதவன்
தென்கொரியாவை அண்டிய எல்லைப் பகுதியில் வடகொரியா தீவிரமான போர்ப்பயிற்சிகளில் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றது.
கடந்த ஒரு வாரமாக அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து தீவிரமான போர்ப்பயிற்சியில் தென்கொரியா ஈடுபட்டு வருகின்றது. வருடாவருடம் இவ்வாறான போர்ப்பயிற்சிகளை தென்கொரியா மேற்கொள்கின்ற போதிலும், இம்முறை முன்னெடுக்கப்பட்டுவரும் போர்ப்பயிற்சியில் மிக அதிகளவான அமெரிக்க இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தென்கொரியாவும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதிவரை இந்தப் போர்ப்பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமெரிக்கா - தென்கொரியாவின் இராணுவப்பயிற்சிகளை தன் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்று எச்சரித்த வட கொரியா, தென்கொரியாவின் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் சமநேரத்தில் தனது எல்லைப் பகுதியிலும் போர்ப் பயிற்சிகளை நடத்தி வருகின்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.