புதியவன்
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் வரும் முதல் தேர்தல் இது. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.
எனினும் கட்சி மற்றும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கட்சியின் தலைவர் விஜய், இதில் பங்கேற்கவில்லை என்றாலும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடர்ந்து ஆலோனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? மக்கள் தலைவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பது குறித்து மாவட்ட நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்திடம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் அதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்தது.
ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திடீரென அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது தான் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக வரும் நாட்களில் போடப்பட்டிருந்த மற்ற சில திட்டங்களையும் ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விஜய் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டாலும், அவரது ஆதரவைப் பெற பெரிய கட்சிகள் முயற்சி செய்து வருகிறதாம்.
இதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில், அத்தகைய சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று தான் ஆலோசனைக் கூட்டத்தை விஜய் இரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.