(புதியவன்)
காசாவில் நடந்து வரும் மோதல் காரணமாக 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் காசா பகுதியில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 7 முதல், இஸ்ரேலின் இராணுவம் காசாவில் குறைந்தது 31 ஆயிரத்து 645 பலஸ்தீனியர்களைக் கொன்றது. பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலிய நடவடிக்கை இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது. ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் பலமுறை மறுத்துள்ளதுடன், அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தற்காப்புக்காக செயல்படுவதாகவும், ஆயிரத்து 130க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாகவும், 200க்கும் மேற்பட்டவர்களை சிறைபிடித்துச் சென்றதாகவும் பதில் கூறி வருகின்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.