புதியவன்
2024 ஆம் ஆண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.சி.பி. அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்.சி.பி. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.
இந்த ஐ.பி.எல். தொடர் டோனியின் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்குமென்பதால் வின்டேஜ் டோனியைப் போலவே தலைமுடியை வளர்த்து வருவதாக இரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
நேற்றையப் பயிற்சியில் தனது மிகவும் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்டினை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹகிம் டொனியின் படங்களைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'நமது ஒரே ஒரு தல மகேந்திர சிங் தோனி' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வின்டேஜ் ஸ்டைலில் இருக்கும் டோனியின் படங்கள் வைரலாகி வருகின்றன. சென்னை இரசிகர்கள் டோனியை அன்போடு தல தோனி என்றழைக்கிறார்கள். இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.