புதியவன்
ஐ.பி.எல். தொடரின் 17 ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவு மூலம் இது உறுதியாகியுள்ளது.
வழக்கமாக ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து அணிகளின் தலைவர்களும் ஐ.பி.எல். கோப்பையுடம் படம் எடுத்துக்கொள்வார்கள்.
அந்த வகையில் சென்னை அணியின் தலைவராகத் துடுப்பாட்ட வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் படம் எடுத்துக்கொண்டார்.
இதன் மூலம் டோனியின் 13 ஆண்டுகால அணித் தலைவர் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.