புதியவன்
சமூக வலைத்தளத்தில் தன்னை மோசமாக விமர்சித்து பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் சுப்ரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும், பா.ஜ.க. மண்டி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத்.
''அன்புள்ள சுப்ரியாவுக்கு. கடந்த 20 ஆண்டு காலமாக ஒரு நடிகையாக பல்வேறு பாத்திரங்களில் நான் நடித்துள்ளேன். அப்பாவி பெண்ணாக, கடவுளாக, பேயாக, தலைவியாக என அந்தப் பாத்திரங்கள் அமைந்துள்ளன.
நம் மகள்கள் குறித்த தவறான கருத்துக்களில் இருந்து நாம் அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புக்கள் குறித்த ஆர்வத்தை கடந்து நாம் வளர வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக பாலியல் தொழிலாளர்களை அவதூறாகப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவரது கண்ணியத்துக்குத் தகுதியானவர்' என கங்கனா தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.