புதியவன்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ். கே. அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. குஜராத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 7 ஆவது லீக் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.
சி. எஸ். கே. சார்பில் அதிகபட்சமாக சிவம் துபே 51, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான சுப்மன் கில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து சாய் சுதர்சன் களமிறங்கினார். சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.
பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் குஜராத் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மட்டுஆம எடுத்தது. இதனால் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் சி. எஸ்.கே. அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.