பூநகரி,முக்கொம்பனில் உள்ளபொதுச் சந்தையை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கொம்பனில் 700க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கு பொதுச்சந்தை அமைக்கப்பட்டுள்ள போதும், அது இயங்காத நிலையிலேயே உள்ளது. இந்தச் சந்தையை இயக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். சந்தை இயக்கப்பட்டால் முக்கொம்பன், அரசபுரம், நேரடம்பன். சின்னப்பல்லவராயன்கட்டு, கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும். சந்தையை இயக்குவதற்குப் பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.