(புதியவன்)
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகமொன்று வெளியே நடத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பினரிடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.அத்தோடு, தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 வயது வரை இருக்கும் என்றும் பெருநகர பொலிஸ் துணை தலைவர் தான்யா டெர்ரி தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.