புதியவன்.
மனித முயற்சிகளின் அனைத்துக் கண்ணோட்டத்திலும் உலகின் வளர்ச்சிக்கு விளையாட்டு எவ்வாறு பங்களித்தது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. உலக வளர்ச்சியில் விளையாட்டின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் ஆதரவுடன் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 67/296 தீர்மானத்தில் ஏப்ரல் 6 ஆம் திகதியை "அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக" அறிவித்தது.
சமூக மாற்றத்தை உண்டாக்குவதற்கும் சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கும் விளையாட்டின் சக்தியை உலகளவில் கொண்டாடுவதற்குமாக இத்தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே ஏப்ரல் 6 ஆம் திகதியின் சிறப்பாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.