(புதியவன்)
பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக இரண்டு நெல் வகைகளை அறிமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாக பத்தலகொட அரிசி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இனங்காணப்பட்ட இந்த இரண்டு மாற்று நெல் இனங்களுக்கு பயிர் விநியோகக் குழுவின் பரிந்துரை வழங்கப்படவுள்ளது.
குறித்த பரிந்துரையை அடுத்து எதிர்வரும் மாதங்களில் அவற்றை இலங்கையில் பயிரிடுவதற்காக விநியோகிக்க உள்ளதாக பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.