1. உங்களிடம் நீங்களே நீ சாதிக்க பிறந்தவன் என தனிமையில் பேசுங்கள்...
2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை... இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.
3. எதிர்மறையான பயங்களை தவிர்த்து நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.
4. வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.
5. நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் அமரவும் பழகுங்கள்... தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.
6. உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.
7. சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்... அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்..
8. இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக... உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்..
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.