புதியவன்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக செ.புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(16) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
கடந்த ஒரு வாரகாலமாக பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சி.சிறிதரன் இடமாற்றம் செய்யவேண்டும் என ஒரு பகுதியினரும், அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என இன்னுமொரு பகுதியினரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிமனையின் மேலதிக கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தரத்தையுடைய செல்லத்துரை புவனேந்திரன் புதிதாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.