எழிலன்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே இன்று புதன்கிழமை(24) சபாநாயகர்
மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் நாடாளுமன்ற
செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
ஏட்டில் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அநுராதபுர மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற
உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் இறப்பின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வீரசேன கமகே உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.