(புதியவன்)
ஈரான் அரச தலைவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, அரச தலைவர் செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரச தலைவர் கலாநிதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் அரச தலைவர் அலுவலகத்தை வந்தடைந்ததுள்ளனர்.
ஈரான் அரச தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன்பின், ஈரான் அரச தலைவருக்கு முப்படையினால் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.