(புதியவன்)
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 22 கரட் (1 பவுண்) தங்கம் 173,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
நேற்று (24) 22 கரட் (1 பவுண்) தங்கம் 174,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று (24) 190,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் (1 பவுண்) தங்கம் இன்று (25) 188,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.