கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீர் சாவு!
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீர் சாவு!

மாதவன்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குடபட்ட சுப்பிரமணியம் வீதி, கந்தரோடைச் சேர்ந்த கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் சிறீதரன் சுஜிதரன் (வயது 19) மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை திடீரென உயிரிழந்துள்ளார்.  

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவனுக்கு கடந்த 27ஆம் திகதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் இணுவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அடுத்த நாளான 28ஆம் திகதியும் இணுவில் மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றுள்ளார்.

இவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு சென்றவருக்கு திடீரென உடல் மேலும் சுகயீனம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சியாலேயே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (ச)

138 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.