அமெரிக்காவின் கொலராடோவில் வசித்து வரும் 77 வயதான முதியவருக்கு அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.
ஓய்வு காலத்தில் ஹோலி க்ராஸ் வைல்டர்நஸ்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை அங்கு அதிஷ்ட லாப சீட்டிழுப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன்படி கடந்த 6 ஆம் திகதி நடந்த அதிஷ்ட குலுக்கலில் அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது. எனினும் அவரால் அதை நம்ப முடியவில்லை.
அவர் அப்பணத்தில் கணிசமான தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாகவும், மனைவிக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளை செய்ய பயன்படுத்த உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.