நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். புதுடெல்லி, மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். அவர் அதில் 5 தங்க பதக்கங்களை வென்று தனது நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
இதன்படி 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களை தட்டி சென்று உள்ளார். இதனால், சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக ஆகியுள்ளார். இந்த மகிழ்ச்சியை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.