[புதியவன்]
வங்கதேசத்தில் தலைமை அமைச்சராக ஷேக் ஹசீனா நேற்று 5வது முறையாக பதவி ஏற்றார். வங்கதேச நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஜன.7ம் திகதி நடந்த ஓட்டுப்பதிவில் ஆளும் அவாமி லீக் கட்சி தொடர்ந்து 4வது முறையாக அமோக வெற்றி பெற்றது. 300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அவாமி லீக் கட்சி 223 இடங்களை கைப்பற்றியது.
இதையடுத்து வங்கதேச தலைமை அமைச்சராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்றார். ஹசீனாவுக்கு அரச தலைவர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.