அயர்லாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில், இலங்கையின் நிஷான் மதுஷ்க தனது முதல் இரட்டைச் சதத்தை பெற்றுள்ளார்.
காலியின் நடைபெறும், சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4 ஆவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அயர்லாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 492 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில், அதிகபடியாக கார்டிஸ் கெம்பர் 111 ஓட்டங்களையும், போல் ஸ்டிர்லிங் 103 ஓட்டங்களையும், எண்டி பால்பிர்னி 95 ஓட்டங்களையும், லோர்கன் டக்கர் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.