புதியவன்.
நடப்பாண்டுக்கான வட மாகாண ஊர் கடந்து ஓடும் விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இவ் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டுப் போட்டித் தொடரின் முதலாவது நிகழ்வான ஊர் கடந்து ஓடும் குறித்த போட்டி கடந்த சனிக்கிழமை(17) வவுனியாவில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட ஆண்கள் அணி 1ஆம் இடத்தையும் பெண்கள் அணி 2ஆம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
மேலும் பெண் பிரிவில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவினை சேர்ந்த எம். கபிலா 1ஆம் இடத்தையும் அதேவேளை ஆண்கள் பிரிவில் பூநகரி பிரதேச செயலர் பிரிவினை சேர்ந்த எஸ். கீரன் 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணி சார்பாக 20வீர-வீராங்கனைகள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.