(புதியவன்)
பாடசாலையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த மாணவி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (06) காலை 7.15க்கும் 7.30க்கும் இடையில் கலவானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தெற்கு குகுலேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியாவார்.
வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது, மாணவி வழுக்கி விழுந்ததாகவும் இதன்போது அருகில் இருந்த ஒன்றரை அடி கொங்கிரீட் கல் அவரது கன்னத்தில் பலமாக மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.