(புதியவன்)
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது.
குறித்த வால் 10 Cm நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது .
Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாலை அகற்றுமாறு பெற்றோர்கள் மருத்துவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் வாலை அகற்ற முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர் .
வால் பகுதி நரம்பு மண்டலத்துடன் இணைந்துள்ளதால், அதனை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.