(ஆதவன்)
பிரான்ஸில் தொடர்ச்சியாகக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் விளைவாக சிறை நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஒரே நேரத்தில் 62 ஆயிரம் கைதிகளைச் சிறை வைக்கக்கூடிய வசதிகளே காணப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது 76 ஆயிரத்து 258 கைதி கள் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 5.5 வீதம் அதிகமாகும்.
'பிரான்ஸில் தற்போது ஏற்பட்டுள்ள சிறை நெருக்கடி கடந்த பல ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினை.
சிறை நெருக்கடி நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகின்றது.
இந்தப் பிரச்சினையை நிவர்த்திப்பதற்குப் பல்வேறுபட்ட தீர்வுகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது' என்று பிரான்ஸின் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கத்தேய நாடுகளில் அண்மைக்காலமாக சிறை நெருக்கடி நிலைமை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.