ஆதவன்.
புறக்கோட்டை மிதக்கும் சந்தையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜப்பான் முதலீட்டாளர் ஒருவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டுள்ளார். பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற் கொள்ளப்படும்.
அதற்கமைய மிதக்கும் சந்தை வளாகம் ஜப்பானிய நகரமாகவும் மிதக்கும் சந்தையாகவும் உருவாக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.