மாதவன்.
பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்குடன் கூட்டுறவு அமைப்பால் யாழ்ப்பாணம் - சித்தங்கேணியில் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆரம்பத்தில் பெண்களுடன் செருப்பு உற்பத்தி மாத்திரம்இடம்பெற்றதுடன் பின்னர் இந்த தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு 8 பெண்கள் வரை வேலை செய்து வருகின்றதுடன் தற்போது பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் கைப்பைகள் என பல்வேறு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதே தமது நோக்கம் என இந்த தொழிற்சாலையின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய விற்பனை நிலையங்களை விட இங்கு பொருட்களின் விலைகள் குறைவாகவும் சிறந்த தரத்துடனும் காணப்படுகிறது. இலாப நோக்கில்லாமல் சேவை நோக்குடனேயே இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஓடர்களை வழங்கினால் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உற்பத்திகளை வழங்க முடியும் என்பதுடன் புத்தாண்டினை முன்னிட்டு இங்கு விலைக்கழிவுகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் தமது விற்பனைகள் அதிகரித்தால் இன்னும் பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க முடியும் என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.