திருநாவுக்கரசு இராஜேஸ்வரி
பிறப்பு
02.02.1935
இறப்பு
07.03.2023
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும், கொண்ட திருநாவுக்கரசு இராஜேஸ்வரி நேற்று (07.03.2023) செவ்வாய்க்கிழமை இந்தியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கிருபரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சுந்தரம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு (புகைப்பட முதுபெரும்கலைஞர், கலாபூசணம், நாடகவியலாளர் மாமனிதர் S.T. அரசு) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற தருமரத்தினம் மற்றும் திருநாவுக்கரசு காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கலைவாணி (நூலகவியலாளர் P.H.D. யாழ். பல்கலைக்கழகம்) மற்றும் அரசகுமார் (பொறியியலாளர் - அமெரிக்கா), கலைச்செல்வி (முன்னைநாள் I.B.C. தமிழ் ஒலிபரப்பாளர் - லண்டன்), காலஞ்சென்ற இளங்கோ மற்றும் ஜீவறஜனி (ஆங்கில பட்டதாரி-நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேந்திரன் (லண்டன்), சர்வேந்திரா (கலாநிதி - நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லவன் (லண்டன்), மாயோன் (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இந்தியாவில் நடைபெறும்,
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
கலா - 0044 772 586 5856cs
இறுதிக்கிரியைகள் 09-03-2023 அன்று 14:48 PM மணியளவில் இந்தியா இல் அமைந்துள்ள இந்தியா மயானத்தில் தகனம் செய்யப்படும்.