(ஆதவன்)
சீனப் பொருளாதாரம் மதிப்பீட்டைவிடவும் 2024 ஆம் ஆண் டின் முதல் காலாண்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்று சீனாவின் தேசிய புள்ளி விவரவியல் பணிமனை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான பொருளாதார வளர்ச்சி 4.8 வீதமாக மதிப்பிடப்பட்ட நிலையில் 5.3 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது என்றும், உலகின் சிறந்த பொருளாதாரங்களில் இரண்டாவது வளர்ச்சி வீதம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தை விட ஏற்றுமதி 7.5 வீதம் சரிந்துள்ளது என்று சீனா அறிவித்த சில நாள்களுக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வலுவான முதல் காலாண்டு வளர்ச்சியானது தற்போதைய சீன அரசாங்கத்தின் நிலையான கொள்கைக்கு வசதியாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.