(மாதவன்)
தாதியர் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனை மற்றும் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை ஆண் பெண் தாதியர்களுக்கிடையிலான போட்டிகள் (01)இன்று பிற்பகல் 2:30 மணியளவில் விடுதி தாதிய சகோதரி திருமதி R.கிருபாகரன் தலமையில் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து தவில் நாதஸ்வர இசை முழங்க மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பமானது.
மங்கல சுடர்களினை பருத்தித்துறை ஆதார மருத்துவமனை மருத்து அத்தியட்சகரும், திருமதி தயாளினி நிகழ்வின் பிரதம விருந்தினருமான மருத்துவ கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன், பரிசில்களை வழங்குவதற்க்காக வருகை தந்த யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர் கே.மகேந்திரன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனை பிரதி பணிப்பாளர் மருத்துவ கலாநிதி S.நித்தியானந்தா, தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் எஸ் ஜெயக்குமார், AIA காப்புறுதி நிறுவன நெல்லியடி கிளை முகாமையாளர் ரகுவரன் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து வரவேற்பு உரை, வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து சிலம்பாட்டம் காட்சி இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தெல்லிப்பளை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகளின் மகளிர் தாதியர்களுக்கான வலைப்பந்தாட்டமும், ஆண் தாதிய உத்தியோகத்தர்களுக்கான மென் பந்து துடுப்பாட்டமும் இடம் பெற்றது.
இதில் மகளிர் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனை அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கும் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை ஆண் தாதியர்களுக்கும் இடம் பெற்றது. இம் மென்பந்து துடுப்பாட்டம் சம நிலையில் முடிவுற்றது.
இப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் பதக்கங்கள், பரிசில்களை நிகழ்வின் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கி மதிப்பளித்தனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போனா மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி நித்யானந்தா. யாழ்ப்பாணம் தாதிய பயிற்சி கல்லூரி அதிபர். எஸ் ஜெயக்குமார். தாதியர் பயிற்சி கல்லூரி சேர்ந்தவர்களான அருள்ஞானரத்னம் கே.நந்தகுமார், பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையின் மேற்றன் திருமதி கே முரளீதரன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மேற்றன் திருமதி துரைச்சாமி. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மேற்றன் திருமதி என் ஞானசந்திரன். உட்பட பருத்தித்துறை, தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைகளின் தாதியோத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள். கொலின்ஸ் விளையாட்டு கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.