[புதியவன்]
ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இலங்கை அணியின் தலைவராக ஓல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் ஜன.6, 8, 11 திகதிகளிலும், டி20 போட்டிகள் ஜன. 14, 16, 18 திகதிகளிலும் நடைபெற உள்ளன. இந்த தொடர்களுக்கான உத்தேச இலங்கை அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக குசால் மெண்டிஸ், டி20 போட்டிகளில் தலைவராக வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளனர். 2 தொடரிலும் சரித் அசலங்கா துணை தலைவராக செயல்பட உள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.