மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகு 4 தியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட் டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிக ரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தி யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க் 5 கவேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் தாமத மாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
சிம்மம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறை முக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
துலாம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் மரி யாதை கூடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங் கும் முயற்சி வெற்றி அடையும்.
விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உங்கள் உழைப்பிற்கு அங்கீ காரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாம லேயே தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். + வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை குறையும். சகிப்புத்தன்மை தேவைப்படும்
மகரம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்கள் ஆவார் கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
i9q1j6
oxiqoy
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.