மருதமுனை இரட்டை படுகொலை; மறு விசாரணைக்காக ஒத்திவைப்பு
மருதமுனை இரட்டை படுகொலை; மறு விசாரணைக்காக ஒத்திவைப்பு

(புதியவன்)

மருதமுனை இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு தொடர்பில் இன்று (28) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  அப்பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு  63 வயதுடைய குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவரை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஏ)

67 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.