புதியவன்.
குறுமன்வெளியில் இருந்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனை வரையிலான புதிய பேருந்து சேவை இன்று வெள்ளிக்கிழமை(19) காலை ஆரம்பமானது.
குறித்த சேவையானது காலை 6மணி மற்றும் காலை11.15 மணிக்கு மட்டக்களப்பு மருத்துவமனையை நோக்கிப் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பேருந்து சேவையான மண்டூர், தம்பலவத்தை, பாலமுனை மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் குறுமன்வெளி, மகிழூர், மகிழூர்முனை மக்களின் நலன்கருதியும், பணிமனை உத்தியோகத்தர்கள், மற்றும் பயணிகளின் நன்மை கருதியும் நேற்றையதினம் முதல் இ.போ.சபை மட்டக்களப்பு சாலையால் குறுமன்வெளி, மகிழூர், மகிழூர்முனை, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பேருந்து நிலையம் ஊடாக மட்டக்களப்பு மருத்துவமனைக்கான ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறுமன்வெளி தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான ஒரு வழிக்கட்டணம்168ரூபாவும் குறுமன்வெளியிலிருந்து மட்டக்களப்பு மருத்துவமனை வரையான ஒரு வழிக்கட்டணம் 176ரூபவகவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.