மேடம்: நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் திடீர்ச் செலவுகளும் ஏற்படும்.
இடபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கியமான தீர்வு காண்பீர்கள், சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். ஆதாயம் பெருகும். சிக்கல்கள் தீரும். வியாபாரம் செழிக்கும்.
கடகம்: யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில், வியாபாரத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும் யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண்வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள் மற்றவர்களுக்காக சிவ செலவுகளை செய்து பெருமைப்படுவிகள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள் வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.
துலாம்: தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்: புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனங்களை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாள்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
தனுசு: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள், வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மகரம்: சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். முன்னுரிமை கிடைக்கும். அமோகமான நாள்.
கும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.
மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.