(புதியவன்)
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் அரசதலைவர் இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானிய அரசதலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.