யாழ்ப்பாணத்தில கனக்கப்பேர் போய்வாற ரெயில்வே ஸ்ரேசன்களில் முதலாமிடம் யாழ்ப்பாணம் ரவுண் எண்டால், இரண்டாமிடம் கொக்குவில்ல உள்ள ஸ்ரேசன் தான். கம்பஸுக்குப் போய் வாறவை, வெளிமாவட்டங்களுக்கு வேலைக் குப்போறவை எண்டு இந்த ஸ்ரேசனில சனத்துக்குப் பஞ்சமில்லை. அப்பிடிப்பட்ட ஸ்ரேசனில் 'சப் ஸ்ரேசன் மாஸ்ரரா' இருந்தவர் லட்சக்கணக்கில காசை ஆட்டையப் போட்டிட்டார் எண்டு. அந்த ஸ்ரேசனையே 'சீல்' வைச்சு மூடிட்டினமாம்.
ஒரு ரெயில்வே ஸ்ரேசனில எப்பிடிக் காசடிக்க முடியும்? அதுவும் நாலுமாசமா இப்பிடி உள்ளால ஆட்டையைப்போட ஏலுமோ? எண்டெல்லாம் கனக்க கேள்வியள் வரத்தான் செய்யுது. உந்த ரெயில்வே ஸ்ரேசனில ரிக்கெற் குடுக்கிறதுக்கு 'சப் ஸ்ரேசன் மாஸ்ரர்' தான் பொறுப்பு. அவர் நிரந்தர வேலையாள் கிடையாது. ஒப்பந்த அடிப்படையிலதான் அவைக்கு வேலை. இப்பிடி நாலைஞ்சு ஸ்ரேசனை பாக்கவேண்டிய பொறுப்பு 'ஸ்ரேசன் மாஸ்ரருக்கு' இருக்கு. அவர் யாழ்ப்பாணம் ஸ்ரேசனில இருந் திட்டு, அடிக்கடிபோய் இவையைளைச் செக்பண்ண வேணும்.அப்பிடிஅவர் செக்பண்ண மறந்ததா லையோ, இல்லாட்டி அப்பிடி செக் பண்ணியும் பிடிக்காதபடி தில்லாலங்கடி வேலையை ‘சப்ஸ்ரேசன் மாஸ்ரர்' செய்ததாலையோ என்னவோ கனகாலமா உந்த காசடிக்கிற விளையாட்டு நடந்திருக்கெண்டு கதைக்கினம்.
எல்லா ரிக்கெற்றிலையும் சீரியல் நம்பர் அடிச்சு. அதின்படி தான் ரிக்கெற் குடுக்கவேணும். இந்த 'சப் ஸ்ரேசன் மாஸ்ரர்' என்ன செய்திருக்கிறார் எண்டால் பழம் இருக்கச் சுளை விழுங்கிற மாதிரி ஒரு வேலை செய்திருக்கிறார். உதாரணமா ஒருநாளைக்கு சீரியல் நம்பர் 500 இல முடிஞ்சால். அடுத்தநாள் ரிக்கெற் 501 தானே தொடங்கவேணும். ஆனால் ஆள் 700 இல இருந்து ரிக்கெற் குடுக்கத் தொடங்கியிருக்கிறாராம். இப்பிடிச் செய்யேக்க முதல் நாள் சீரியல் நம்பரோட ஒருத்தரும் ஒப்பிட்டுபாக்க மாட்டினம் எண்ட தைரியம். அவர் நினைச்ச மாதிரியே மேலதிகாரிமாரும் அதைக் கண்டுபிடிக் காததால இப்பிடி லட்சக்கணக்கில காசைச் சுருட்டி, இப்ப அது பிடிபட்டுப் போட்டுது. உதுக்குக் காரணமான 'சப் ஸ்ரேசன் மாஸ்ரரும்', 'ஸ்ரேசன் மாஸ்ரரும்' இப்ப தற்காலிகமா வேலையில இருந்து நிப்பாட்டுப் பட்டிருக்கினம்.
இதெல்லாம். அவையின்ர திணைக்களப் பிரச்சினை. ஆனால் இந்தப் பிரச்சினையால உடனடியா அந்த ஸ்ரேசனுக்கு சீல் வைச்சதுதான் சனத்துக்குப் பெரும் சில்லெடுப்பா போட்டுது. எக்கச்சக்கம்பேர் போய்வாற ஸ்ரேசனை இப்பிடி மின்னாமல் முழங்காமல் சீல் வைச்சுப் பூட்டினால் எங்கபோய் ரிக்கெற் எடுக்கிறதெண்டு தெரியாமல், அரைவாசிப்பேர் பஸ்ஸில போவம் எண்டு வெளிக்கிட்டிட்டினம். கொக்குவில் ஸ்ரேசனில் ஏறுற ஆக்கள் யாழ்ப்பாணம் ரவுணில உள்ள மெயின் ஸ்ரேசனில ரிக்கெற் எடுக்கிற வசதி செய்யப்பட்டி ருக்காம். ஆனால் அது சனத்துக்கு எப்பிடித் தெரியும்? அதைப்பற்றி உரியமுறையில அறிவிச்செல்லோ இருக்கோணும், தென்னையில தேள் கொட்ட பனையில நெறி கட்டின கதையா, ஆரோ காசடிச்சுக்கொண்டுபோக, அப்பாவிச் சனமெல்லோ அந்தரப்பட்டுத் திரியினம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.