(புதியவன்)
எல்ல - வெல்லவாய பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், 15 வருடங்களாக நடத்தி வந்த, வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியமையாலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எல்ல - வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.
அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 70 வர்த்தக நிலையங்களே இவ்வாறு அகற்றப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக வரத்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.