[புதியவன்]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. 1 ஆக பதிவாகியுள்ளது. இதனால், இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேசிய நில அதிர்வு மையத்தின் படி, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் ஏற்பட்டதாகவும், பிற்பகல் 2.50 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.