(ஆதவன்)
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் சமர்ப்பிக்கப்பட்டடுள்ள இந்த அமைச்சரவைப்பத்திரத்தில் வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும்போது வீட்டு உரிமையாளர்கள் செலுத்தவேண்டிய நொத்தாரிசுக் கட்டணம், முத்திரைக் கட்டணம் மற்றும் பிற வரிகளுக்குச் செலவிடப்படும் தொகை திறைசேரியால் ஏற்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.