(புதியவன்)
“அரச ஊழியர்களே இப்போது மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், அரசாங்க ஊழியரை விட தேங்காய் பறிப்பவர் நன்றாக வாழ்கிறார்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம், இப்பலோகம பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் இப்பலோகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பிரதேச செயலகத்தில் நிலவும் யானைப் பிரச்சினைகள், விவசாயப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.