புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகாரங்கள்: 2023ஆம் ஆண்டை விட 2024 இல் செலவு குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்!
புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகாரங்கள்: 2023ஆம் ஆண்டை விட 2024 இல் செலவு குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்!

(புதியவன்)

சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய( "கெவிலி" ) பலகாரங்கள் அட்டவணையை வகைப்படுத்துவதற்கான செலவு 2023 ஆம் ஆண்டை விட 2024 இல் குறைந்துள்ளதாக Verite Research மூலம் நடத்தப்படும் PublicFinance.Lk தெரிவித்துள்ளது.

ஆனால் 2019 இல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் பொருட்களின் விலை 2% குறைவாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் செலவுகள் 2019 உடன் ஒப்பிடும்போது 2.3 மடங்கு அதிகரித்துள்ளது.2024 ஆம் ஆண்டில் இது 2019 ஆம் ஆண்டின் விலையை விட 2.2 மடங்கு குறைந்துள்ளது. ஒரு பலகார அட்டவணை பாரம்பரிய வரிசையைக் கொண்டுள்ளது.

வீடுகளுக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும், பால் சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அல்வா, பயறு பலகாரம், தொதொல், மற்றும் வெண்ணெய் கேக் ஆகியவை பலாகார மேசையின் பொதுவான உணவு வகைகளாகும்.

2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1), மற்றும் 2024 (மார்ச் வாரம் 3) ஆகிய ஆண்டுகளுக்கான கொழும்பு மாவட்டத்தில் அதன் திறந்த சந்தை வாராந்திர சராசரி சில்லறை விலைகள் உட்பட, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து விலைத் தரவு நேரடியாகப் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.(ப)

#eelam #todaysrilanka #todaytamilnews #todayjaffna #srilankanews

111 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.