(புதியவன்)
இலங்கையில் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது உலகின் அரிதான இரத்தினங்களில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுகோண இரு பிரமிட்டு வடிவம் கொண்ட குறித்த இரத்தினக்கல் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
802 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது இயற்கையாக ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்று. உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின், மிகப்பெரிய நீல கொருண்டம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.