சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் போராட்டம்
சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் போராட்டம்

எழிலன்

அனைத்துத் தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் இவ்வாறு கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாதியர்கள் எதிர்நோக்கும் சம்பளம் மற்றும் சீருடைக் கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர்.

சுகாதார மற்றும் தாதியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க, உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தராவிட்டால் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் 72 தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த பாரிய போராட்டங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்றுள்ளன. 

சுகாதாரத் துறையில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மேலதிக கொடுப்பனவு 35 ஆயிரம் ரூபாவை எமக்கும் வழங்க வேண்டும்.

அதனை, 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டின் அரச தலைவர், நிதி அமைச்சர் இவ்விடயத்தில் அதிக கரிசணை செலுத்த வேண்டும்.

நாங்களும் எமது தொழிற்சங்கமும் அரசுக்கு கால அவகாசம் வழங்கி வந்தோம். அப்பாவி மக்களுக்காக எமது போராட்டங்களைத் தொடர்ச்சியாக நாங்கள் நிறுத்தி மக்களுக்காக எமது சேவைகளை முன்னெடுத்து வந்தோம்.

எனினும், இந்த நாட்டின் அரசு எமக்கு நீதியான தீர்வை வழங்க முன்வருவதாகத் தெரியவில்லை.

இதனால், எமது தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று நாடளாவிய ரீதியில் நான்கு மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தி முன்னெடுத்தோம்.

எனினும், மன்னார் மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரையான ஒரு மணி நேரம் எமது போராட்டத்தை முன்னெடுத்தோம்.

எமக்கு இன்றைய தினம் நீதியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் எமது போராட்டம் மீண்டும் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.(க)
 

266 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.