மாதவன்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும் கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்;
யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன்.
நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது .
ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன் மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.